நடிகர் தனுஷ் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இத்தனை கோடியா?…. வைரலாகும் தகவல்!… ஷாக்கான ரசிகர்கள்!…

நடிகர் தனுஷ் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இத்தனை கோடியா?…. வைரலாகும் தகவல்!… ஷாக்கான ரசிகர்கள்!…

நடிகர் தனுஷ் பயன்படுத்தி வரும் சொகுசு கார்களின் மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.நடிகர் தனுஷ் 2002ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, பொல்லாதவன், படிக்காதவன், அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதை தொடர்ந்து வெளியான ‘நானே வருவேன்’ திரைப்படம் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இவர் தற்பொழுது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இவர் நடிப்பில் ஏற்கனவே உருவாகியுள்ள ‘வாத்தி’  திரைப்படம் 2023 இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் மொத்தம் ஐந்து சொகுசு கார்களை பயன்படுத்தி வருகிறார். இதில் கோடிக்கணக்கில் மதிப்புடைய இரண்டு கார்களை குறித்து தான் தற்பொழுது இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் முதலாவதாக தனுஷ்  பயன்படுத்தி வரும் ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் இடம்பிடித்துள்ளது. ரூ. 7 கோடி பதிப்பிலான இந்த காரை தமிழ் திரையுலகில் ஒருசிலர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.

அடுத்ததாக ரூ. 3.20 கோடி பதிப்பிலான பேண்டிலி எனும் கார் உள்ளது. இதை தவிர்த்து ரூ. 1.20 கோடி பாதிப்பிலான ஆடி கார் ஒன்றையும் தனுஷ் பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த கார்களின் புகைப்படங்கள்..

Begam