சர்க்கரை நோயால் படுத்த படுக்கையாக கிடந்த தந்தை… உயிரோடு தீ வைத்து எரித்த மகன்… குமரியை நடுங்கவைத்த சம்பவம்…!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் அருமலை அடுத்த இடைக்கோடு முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்தவர் 70 வயது சிகாமணி. கூலி தொழிலாளியான இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள். அதில் மூன்று மகன்களுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி அதே பகுதியில் வசித்து வந்துள்ளார்கள். கடைசி பையன் சுனில் குமாருக்கு மட்டும் திருமணமாகவில்லை. இதற்கிடையில் கடந்த ஐந்து வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிகாமணியின் இடது கால் அகற்றப்பட்டது .இதனால் நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதனால் மகன்கள் சேர்ந்து வீட்டின் பக்கத்தில் ஒரு சிறிய ரூம் கட்டி அதில் தங்க வைத்து கவனித்து வந்துள்ளார்கள்.

திருமணமாகாத கடைசி பையன் சுனில் குமார் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்ததால் அடிக்கடி தந்தையுடன் சொத்து தகராறு குறித்து சண்டையிட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுனில் குமாருக்கும், தந்தை சிகாமணிக்கு இடையே பெரும் தகராறு வெடித்ததில் படுத்த படுக்கையாக கிடக்கிறார் என்றும் யோசிக்காமல் தந்தையை  தகாத வார்த்தையால் திட்டி அருகில் பெயிண்டில் கலக்க வைத்திருந்த தின்னரை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துள்ளார். படுத்த படுக்கையாக இருந்த சிகாமணிக்கு எழுந்திருக்க கூட முடியாததால் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சுனில் குமாரை கைது செய்துள்ளார்கள்.