பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்தக் கோரி தமிழக அரசுக்கு மனு அளிகப்பட்டது. ஆனால் இந்த மனுவந்து பரிசீலிக்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்தது.
நீதிபதி லட்சுமிநாராயணன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில், வரும் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான அறிக்கையை ஜனவரி 5ஆம் தேதி தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
