மராட்டிய மாநிலம் ஜல்ளா மாவட்டத்தில் உள்ள பத்னாபூர் தாலுகா சந்தானம் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வர் என்பவருடைய மனைவி மனிஷா (25). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென்று மாயமானார். அவருடைய குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால் கணவர் காணாமல் போய்விட்டதாக மனிஷா போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள அணையில் இருந்து ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் அது பரமேஸ்வரின் உடல் என்பதும் அவர் கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை தொடங்கியதில் கணவர் காணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்த மனிஷாவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடக்கு பிடி விசாரணை நடத்தினர். அதில் மனிஷாவுக்கும் அவருடைய கணவரின் இளைய சகோதரர் தியானேஸ்வருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும் இவர்களின் கள்ளக்காதலுக்கு பரமேஸ்வர் எதிர்ப்பு தெரிவித்ததால் தங்கள் உறவுக்கு தலையாக இருக்கும் அவரை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் 15 ஆம் தேதி இரவு தியானேஸ்வர் தனது அண்ணனை தலையில் கல்லால் தாக்கி உள்ளார். மனிஷா ஒரு துணியால் அவருடைய கழுத்தை நெரித்த நிலையில் துடிதுடிக்க அவர் உயிரிழந்தார். பிறகு இருவரும் சேர்ந்து உடலை ஒரு பாலித்தீன் பையில் சுற்றி அதில் கல்லை கட்டி அணையில் வீசியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
