வேட்டைக்காரன் படத்தில் தனது தந்தை நடிகர் விஜயுடன் நான் அடிச்சா தாங்க மாட்டோ நாலு மாசம் தூங்க மாட்டே என்ற பாடல் காட்சியில் ஜேசன் சஞ்சய் நடித்திருந்தார். பிறகு அவர் தனது தந்தையை போல சினிமாவில் நடிக்க விரும்பாமல் தனது தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல சினிமா இயக்குனராக விரும்பினார். இதற்காக வெளிநாட்டில் டைரக்ஷன் சார்ந்த படிப்புகளை முடித்த ஜேசன் சஞ்சய் சில குறும்படங்களையும் டைரக்ட் செய்திருக்கிறார். இப்போது சிக்மா படத்தின் மூலம் இயக்குனராகி உள்ளார்.
இயக்குனர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான முதல் படம் சிக்மா விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வருகிற 23ம் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்த ஒரு அறிமுக அப்டேட் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தனது படக்குழுவினருடன் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கிளிப்பிங் காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ளன.
