குஷியோ குஷி… தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு சார்பில் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திரு உத்திரகோசமங்கை ஸ்ரீ மங்கள நாத சுவாமி கோவில் ஆருத்ரா விழாவை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் செயல்படாது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 10 சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.