போடு ரகிட ரகிட… இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

ரயில்வே வாரியம் தற்போது ரயில்கள் புறப்படுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு ஷார்ட் லிஸ்ட் வெளியிடப்படுகின்றது. இதனால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை வைத்திருப்பவர்கள் தங்களுடைய டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா? ஆகாதா என்பது தெரியாமல் திணறுகிறார்கள். டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் போனால் இறுதி நேரத்தில் மாற்று வழிகளை தேட வேண்டியுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்திப்பதால் இதனை தவிர்க்கும் விதமாக சராசரியாக 10 மணி நேரத்திற்கு முன்பே ஷார்ட் லிஸ்ட் வெளியிடப்படும் நடைமுறையை ரயில்வே வாரியம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி காலை 5.01 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு அட்டவணை முந்தைய நாள் இரவு 8 மணிக்குள் தயாரிக்கப்படும். மதியம் 2.01 மணி முதல் இரவு 11.59 மணி வரை மற்றும் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு குறைந்தது 10 மணி நேரங்களுக்கு முன்பே அட்டவணை தயாரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் இந்த விதிகள் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் பயணிகள் தங்களுடைய டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிவிட்டதா இல்லையா என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.