நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் நடிகை மல்லிகா. இவர் கடந்த 2002ம் ஆண்டில் மலையாள படம் ஒன்றில் நடித்து பிறகு தமிழ் சினிமாவில் மல்லிகா அறிமுகமானார். தொடர்ந்து சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. குண்டக்க மண்டக்க திருப்பதி உனக்கும் எனக்கும் தோட்டா உள்ளிட்ட படங்களில் மல்லிகா நடித்திருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் நடித்த படம் சென்னையில் ஒரு நாள். அதன்பிறகு மலையாள இயக்குனரை திருமணம் செய்து கொண்டு இவர் கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை மல்லிகா கூறியதாவது, சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் விஜய். அதை விட்டுவிட்டு மக்களுக்காக நல்லது செய்ய அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரை புரிந்து கொள்ளாமல் தவறாக பேசுகிறார்கள். அவரை வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். விஜய் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
விஜய்க்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த மல்லிகா, விஜய் கூப்பிட்டால் பிரச்சாரத்திற்கு யாராவது போகாமல் இருப்பாங்களா? நிச்சயமாக நான் போவேன். படப்பிடிப்பு ரொம்பவும் அமைதியாக விஜய் இருப்பார். ஆனால் கட்சி ஆரம்பித்து மக்கள் கிட்ட பேசும்போது அவர்கிட்ட நிறைய மாற்றம் தெரிந்தது. அதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவர் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் மக்கள் முன்னாடி அல்ல என்று நடிகை மல்லிகா கூறியிருக்கிறார்.
