பயம் அறியாத சிறுமி ஒருவரின் அபாரமான மனதிடம் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஒரு நிகழ்வின் போது அந்தச் சிறுமி மெழுகுவர்த்தியை ஏந்தியிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது தலைமுடியில் தீப்பற்றியது. பொதுவாக இதுபோன்ற சூழலில் எவரும் பதற்றமடைந்து அலறுவார்கள்.
Strong girl! She handled the accident very calmly and gracefully it felt like nothing had happened. pic.twitter.com/gKzHTEdFeO
— Rahi🍁 (@TheSarcastica) December 18, 2025
ஆனால், அந்தச் சிறுமி துளியும் பயப்படாமல், மிகவும் அமைதியாகவும் நேர்த்தியாகவும் தன் கையாலேயே தீயை அணைத்தார். அந்த விநாடிக்குப் பிறகு, தனக்கு எதுவுமே நடக்காதது போல மிகவும் இயல்பாக அவர் நின்றது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுமியின் அசாத்தியமான தைரியத்தைக் கண்டு இணையதளவாசிகள் அவரை “பலமான பெண்” என்று பாராட்டி வருகின்றனர்.
