வேலை முக்கியம்தான்.. அதுக்குன்னு இப்படியா..? விஜய் 68 படத்தின் புதிய அப்டேட்..!!

By admin on ஐப்பசி 1, 2023

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்துள்ளனர்.

   

லியோ படம் இந்த மாதம் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எப்போதும் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் லியோ படம் முடிந்த கையோடு இடைவெளி இல்லாமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார்.

   

 

விஜயின் 68-வது படத்தில் நடிக்க இருக்கும் கதா நாயகிகள் குறித்து நிறைய பிரபலங்களின் பெயர் அடிபடுகிறது. ஆனால் இதுவரை உறுதியாக எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது விஜய் தனது 68-வது படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.