தடம், கழகத் தலைவன் போன்ற மாபெரும் படங்களை கொடுத்த “மகிழ் திருமணி” அவர்கள், தற்போது “அஜித்” அவர்களை வைத்து “விடாமுயற்சி” படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் திரிஷா போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது, அஜித் அவர்களின் பிறந்த நாளான மே 1ம் தேதி அன்று படத்தின் டைட்டிலே வெளியிட்டார்கள்.
விறுவிறுப்பாக போன படப்பிடிப்பு சில பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, ஆனால் இப்பொழுது மீண்டும் துவங்கிய நன்றாக படப்பிடிப்பு போய்க் கொண்டிருந்த வேளையில் சமூக வலைதளத்தில் ஒரு வதந்தி ஒன்று பரவி வருகிறது, அதாவது அஜித் அவர்கள் படப்பிடிப்பிற்கு சரியாக வராமல் தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றி திரிகிறார், அதனால் தான் படப்பிடிப்பு தாமதமாகிறது, படம் வெளியாக வெளியாகாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என்று பலரும் பல மாதிரி வதந்திகளை பரப்பி வந்தார்கள்.
ஆனால் அது உண்மை இல்லை என்று எப்போது படப்பிடிப்புத் தளத்தில் படத்தை எடுக்க பட்ஜெட் பத்தாமல் நிப்பாட்டி வைத்துள்ளார்களாம், இதனால் தான் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டிருக்கிறது என்று தற்போது தகவல் வெளியாகிறது. இதனால் கடும் வேதனையில் அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படம் தாமதம் ஆவதால், வரும் ஏப்ரல் மாதம் ஆதி ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து படம் தொடங்கி விடலாம் என்று நினைத்து,
தற்போது அவருக்கும் மே மாதம் தான் தொடங்க அஜித்தின் டேட் கிடைத்துள்ளதாக தெரிய வருகிறது, அதனால் அஜித்தை வைத்து இயக்கும் இயக்குனர்களுக்கு படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது, இத ரசிகர்கள் எதிர்பார்ப்பை குறைக்கும் அளவில் விடாமுயற்சியின் படபிடிப்பு தாமதமாக நடந்து கொண்டிருக்கிறது, இந்த பட்ஜெட் பிரச்சினை எல்லாம் முடித்து சீக்கிரம் திரைக்கு படம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
