குக் வித் கோமாளியில் இருந்து விலகும் முக்கிய நபர்.. அச்சச்சோ!.. இவர் இல்லனா இந்த ஷோவே நல்லா இருக்காதே..

By Ranjith Kumar on மாசி 23, 2024

Spread the love

பிரபல தனியார் சேனல் ஆன விஜய் டிவியில் பல பிரபலமான நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டு வருகிறது. அதில் நீயா நானா, சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக், ராமர் வீடு, போன்ற பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் குதூகலமாக சந்தோஷப்படுத்திய நிகழ்ச்சி என்றால் அனைவரும் கூறும் ஒரே நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”, இந்த நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாக தொகுத்து வருகிறார்கள்.

   

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகு தான் விஜய் டிவிக்கு பெறும் டி.ஆர்.பி ரேட் ஏறியது. ஆனால் இந்த நிகழ்ச்சி வெறும் டி.ஆர்.பி ரேட்டுக்கு, பணத்திற்காகவோ மக்கள் பெரும் அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை, இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கும் புகழ், பாலா, தர்ஷன், செஃப் தாமு, வெங்கடேஷ் பட், மணிமேகலை சிவாங்கி, குரேஷி இவர்கள், அனைவரும் தமிழ் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்பத்தினராகவே வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நடிக்கவே இல்லை என்று கூறலாம்.

   

தற்போது இந்த நிகழ்ச்சியில் அவர்களின் எதார்த்தமான பேச்சையும் எதார்த்தமான விஷயங்களை வெளிப்படுத்தி நகைச்சுவை உருவாக்கி பெரிய காமெடி கலாட்டாவையே உண்டு பண்ணி மக்களை சிரிக்க வைப்பது தான் இந்த நிகழ்ச்சியின் பெரிய பலமே ஆகும். இந்த நிகழ்ச்சியில் எதார்த்தமாக செய்யும் ஒவ்வொரு விஷயமும் பெரிய நகைச்சுவை போரே நடந்து முடிந்தது போல் மக்கள் ஒவ்வொருவரும் தன் மனம் விட்டு சிரிப்பார்கள். தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சிக்கு பெருமளவில் ஆதரவு உண்டு, இந்த நிகழ்ச்சி வெற்றியை கண்டு பக்கத்து மாநிலங்களில் உள்ள தெலுங்கானா, கன்னடத்தில் இதேபோன்று ஒரு நிகழ்ச்சியை நடத்தும் அளவிற்கு இது பெரும் பேர் பெற்றுள்ளது.

 

முக்கியமாக இந்த நிகழ்ச்சியை தூக்கி நிறுத்தும் செஃப் இரண்டு பேர் “தாமு” “வெங்கடேஷ் பட் “அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய தூண் என்றே கூறலாம். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குடும்பமாகவே இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து வந்தார்கள், ஆனால் தற்போது “செஃப் வெங்கடேஷ் பட்” அவர்கள் சில தவிர்க்க முடியாத காரணத்தால், இந்த நிகழ்ச்சியை விட்டு முழுமையாக வெளியேறுகிறாராம். இதைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் மனக்கசப்புடன் இவரை வெளியே போக வேண்டாம் என்று பலரும் இணையத்தில் இதற்காக பதிவுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். செஸ் வெங்கடேசன் அவர்களின் இணைய பக்கத்தில் தனிப்பட்ட முறையில் பல ரசிகர்கள் வேண்டி கேட்டுக்கொண்டு வருகிறார்களாம், அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சியில் முக்கிய தூணாக இருந்தவர் “வெங்கடேஷ் பட்” என்றே கூறலாம்.