“இப்படியும் கூடவா பண்ணுவாங்க….?” கொரோனா காலத்தில் கூட நடக்காத சம்பவம்… மயானத்திற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

By Srimathi on புரட்டாதி 10, 2025

Spread the love

பொள்ளாச்சி அருகே நேற்று இறந்த பெண் ஒருவரை அடக்கம் செய்வதற்காக, உறவினர்கள் மயானத்திற்கு சென்ற பொழுது, அங்கு ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக அடக்கம் செய்வதற்கு முன்னால், ஒரே ஒரு குழியை மட்டும் தோன்றுவது பலரின் வழக்கம். ஆனால் இங்கு முன்னரே பல குழிகள் தோண்டப்பட்டு இருந்தது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் கூட இத்தகைய சம்பவம் நடந்ததில்லை. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மயான பராமரிப்பாளர் பாபு, ஜேசிபியை கொண்டு குழிகளை முன்கூட்டியே தோண்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து நகராட்சி ஆணையரிடம் விசாரித்த பொழுது, தோண்டப்பட்ட குளியல் மூடப்பட்டு விட்டதாகவும், இது தொடர்பாக பாபுவிடம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.