இனி என்னால வாழ முடியாது, எனக்கு விஷம் கொடுத்துடுங்க.. நீதிபதியிடம் கெஞ்சி கதறிய நடிகர் தர்ஷன்.. பெரும் பரபரப்பு!!!

By Divyamayakannan on புரட்டாதி 10, 2025

Spread the love

கர்நாடகா, கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஆண்டு அவருடைய ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ளார். இன்று வரை வழக்கு விசாரணையில் உள்ளது. தற்போது நீதிமன்ற காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவர் சிறையில் நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், என்னால் இனி வாழ முடியாது எனக்கு விஷம் கொடுத்து கொன்று விடுங்கள் என்று நீதிபதியிடம் கெஞ்சியுள்ளார்.

நேத்து நடந்த விசாரணையின் போது சிறையில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலம் தர்ஷன் ஆஜர் ஆகினார். அப்போது பேசிய அவர் நான் சூரிய ஒளியை பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. என்னைச் சுற்றி பூஞ்சைகள் அதிகமாக உள்ளது. நான் அணிந்திருக்கும் ஆடையிலும் துர்நாற்றம் வீசுகிறது. இது போன்ற சூழ்நிலையில் என்னால் இனி வாழ முடியாது. அதனால் எனக்கு விஷம் கொடுத்து கொன்று விடுங்கள் என்னை பார்த்தால் உங்களுக்கு பரிதாபமாக இல்லையா என்று கேட்டுள்ளார். நீதிபதி அவர்கள் அதற்கு சாத்தியம் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.