நடிகை நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி இன்றி சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்த தடை கோரி ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு அக்டோபர் ஆறாம் தேதி வரை அவகாசம் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
