பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா சர்வதேச விமான நிலையத்தில் (Ninoy Aquino International Airport), பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பயணியின் பணத்தைத் திருடி, அதை மறைக்க விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதுகாப்புச் சோதனையின் போது (Security Screening), ஒரு பயணியின் பையில் இருந்த 300 அமெரிக்க டாலர்களை (சுமார் ₹25,000) அந்த பெண் பாதுகாப்பு அதிகாரி திருடியுள்ளார். இது குறித்து அந்தப் பயணி அதிகாரிகளிடம் புகார் அளித்ததை அடுத்து, பிடிபடுவதைத் தவிர்க்க அந்த அதிகாரி பணத்தை மடித்து வாயில் போட்டு விழுங்க முயன்றார்.
A security officer at a Philippine airport stole money from a passenger during a search. When the man reported the theft, she tried to swallow it to avoid detection. However, reviewing the camera footage revealed the shocking truth. pic.twitter.com/UtznKwCQ7W
— GPX (@GPX_Press) January 30, 2026
