இத்தாலியின் டஸ்கனி (Tuscany) மாகாணத்தில் உள்ள பிஸ்டோயா (Pistoia) நகரில், 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஜியாச்செரினோ (Giaccherino) மடாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவின்போது நிகழ்ந்த விபத்து உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது விருந்தினர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது, முதல் தளத்தின் தரைப்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் மணமக்கள் உட்பட பலர் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர்.
Balcony Accident A balcony collapsed while people were celebrating on it at a wedding in Italy. pic.twitter.com/jXAwMJgcq8
— Crazy Moments (@Crazymoments01) January 30, 2026
இந்த விபத்தில் மணமக்கள் மற்றும் விருந்தினர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குவார். 26 வயதான பாலோ முக்னைனி (Paolo Mugnaini) மற்றும் வலேரியா யபர்ரா (Valeria Ybarra) ஆகிய மணமக்கள் தங்களது முதலிரவை மருத்துவமனையிலேயே கழிக்க வேண்டிய துயரம் ஏற்பட்டது. த்து இத்தாலியப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
