விஜய் – சங்கீதா விவாகரத்து ரகசியம் கசிந்தது எப்படி..? கோர்ட் சீல் இல்லாத ஆவணம்.. சங்கீதா தரப்பு மீது பாயும் சந்தேகம்…!!

By Soundarya on பங்குனி 21, 2026

Spread the love

நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து மனு விவரங்கள் சமூக வலைதளங்களில் கசிந்தது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் ஆதித்யா சோழன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள செங்கல்பட்டு முதன்மை நீதிபதி, பொதுவெளியில் கசிந்த அந்த ஆவணத்தில் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ முத்திரை ஏதும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் அந்த ஆவணங்கள் நீதிமன்றத்திலிருந்து கசியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மனுதாரர் தரப்பிலிருந்து (விஜய் அல்லது சங்கீதா) இதுவரை முறையான புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்பதையும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். முறையான புகார் இல்லாத நிலையில், நீதிமன்ற முத்திரை இல்லாத அந்த ஆவணங்கள் சங்கீதா தரப்பிலிருந்தே வெளியாகியிருக்க வாய்ப்புள்ளதாக நீதிபதியின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

   

சங்கீதா தாக்கல் செய்துள்ள இந்த விவாகரத்து மனுவில், குடும்ப நல நீதிமன்றம் விஜய்க்கு ஏப்ரல் 20-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், தான் தங்கியிருக்கும் நீலாங்கரை வீட்டிலேயே தொடர்ந்து வசிக்க அனுமதி கோரி சங்கீதா தரப்பில் புதிய இடைக்கால மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.