கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கள்ளத்தொடர்பைத் துண்டித்த ஆத்திரத்தில், மூன்று குழந்தைகளின் தாயான பானு (34) என்ற இளம்பெண்ணை அவரது கள்ளக்காதலன் கபீஜ் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சந்திரா லே-அவுட் பகுதியைச் சேர்ந்த அல்தாப் பாஷா என்பவரின் மனைவியான பானுவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான கபீஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கபீஜுடனான தொடர்பை பானு துண்டித்து அவரிடமிருந்து விலகி இருக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கபீஜ், நேற்று முன்தினம் பானுவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த கத்தியால் பானுவைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த பானு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பானு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கொலையாளி கபீஜைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
