BIG NEWS: பத்திரப்பதிவு செய்ய முடியாது… பொதுமக்களுக்கு தமிழக பத்திரப்பதிவுத் துறை முக்கிய வேண்டுகோள்…!!

By Soundarya on தை 5, 2026

Spread the love

தமிழகப் பத்திரப்பதிவுத் துறையின் தரவுகளைச் சேமிக்கும் வன்பொருளில் (Hardware) கடந்த ஜனவரி 3-ஆம் தேதி திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இணையவழிப் பத்திரப் பதிவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோளாறைச் சரிசெய்யும் பணிகளில் தொழில்நுட்பக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொழில்நுட்பப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் இதனை உணர்ந்து தங்களது பத்திரப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு பதிவுத்துறைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். கோளாறு முழுமையாகச் சரிசெய்யப்பட்ட பின்னரே சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.