“அடேய் எங்க இருந்துடா யோசிக்கிறீங்க”… வலி மாத்திரை தான் திருமண அழைப்பிதழ்… ஒட்டுமொத்த நீயா நானா அரங்கத்தையும் வியக்க வைத்த நபர்…!

By Nanthini on தை 5, 2026

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. பல வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். மற்ற நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும்போது இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் புதிதாக ஏதாவது ஒரு தலைப்பு கொண்டே விவாதம் நடைபெறும். இப்படியான நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் திருமண அழைப்பிதழ்கள் மரபு ரீதியானதாக இருக்க வேண்டும் என்று கூறும் தரப்பினருக்கும், இல்லை அது நம்முடைய ரசனை கூறியதாக இருக்க வேண்டும் என்போருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. அதில் திருமண அழைப்பிதழ் தங்களுடைய ரசனை கூறியது என்போர் சார்பாக பங்கேற்ற நபர் ஒருவர் வலி மாத்திரை வடிவில் திருமண அழைப்பிதழை அச்சிட்டு அரங்கத்தையே வியப்பில் ஆழ்த்திய சுவாரசியமான காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Vijay Television பதிவைப் பகிர்ந்துள்ளார் (@vijaytelevision)