ஐயோ… மைதானத்தில் பாய்ந்த கல்… ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த நடுவர்… ஈக்வடாரில் பதறவைக்கும் விபரீதம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 21, 2026

Spread the love

ஈக்வடாரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, உதவி நடுவர் லெனின் ஒஜேடா என்பவரை மாற்றாட்ட வீரர்கள் அமரும் பகுதியிலிருந்து வீசப்பட்ட கல் தாக்கியதால் அவர் பலத்த காயமடைந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

போட்டியின் நடுவே வீசப்பட்ட கல் நேரடியாக லெனின் ஒஜேடாவின் முகத்தில் பலமாகத் தாக்கியது. இதனால் அவர் முகத்தில் தீவிர காயம் ஏற்பட்டு, மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாமல் களத்திலேயே விழுந்தார்.

   

https://twitter.com/joacosaavedraq/status/2112356242173694074/video/1

   

உடனடியாக மைதானத்திற்குள் நுழைந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மைதானத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.