அய்யய்யோ… என்ன இது?… கிரிக்கெட் மைதானத்தில் ரசிகரை… செருப்பால் அடித்து துவம்சம் செய்த காஷ்மீரி வீரர்… தாயை அசிங்கமாக திட்டியதால்… வெறிக்கொண்டு தாக்கிய அதிர்ச்சி… இணையத்தில் வீடியோ வைரல்…!

By Swetha on ஐப்பசி 21, 2026

Spread the love

ஸ்ரீநகரில்  நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது கஷ்மீர் வீரர் ஒருவர் பார்வையாளரை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற ‘ரெட் பிரீமியர் லீக்’ தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், ராயல் குட்வில் அணியும் ஆத்வாஸ் இந்தியா லெவன் அணியும் மோதின. இப்போட்டியில் ஆத்வாஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து, மைதானத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற அணியின் ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் நுழைந்து உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. அப்போது ராயல் குட்வில் அணிக்காக விளையாடிய பிரபல கஷ்மீரி கிரிக்கெட் வீரர் ஜகாங்கீர் லோன், மைதானத்தில் இருந்த ஒரு பார்வையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அடித்து உதைக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. அங்கிருந்த மற்றவர்கள் அவர்களை விலக்கிவிட முயன்றும் வீரரின் ஆத்திரம் அடங்கவில்லை.

   

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு விளக்கம் அளித்துள்ள கிரிக்கெட் வீரர் ஜகாங்கீர் லோன், எதிரணி ஆதரவாளர்கள் தன்னைத் தாழ்த்திப் பேசியதுடன் தனது தாயை அவதூறாகத் திட்டியதாகவும், அதனாலேயே தான் கோபத்தை இழந்து தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். தாய் இகழ்ச்சியை எக்காரணம் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாது என்று அவர் நியாயம் கற்பித்தாலும், விளையாட்டு மைதானத்தில் வீரர் ஒருவர் ரசிகரைக் கையாண்ட இந்த வன்முறைச் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.