பெங்களூரைச் சேர்ந்தவர் ககன் ராவ் .31 வயதான இவர் வங்கி ஊழியராக உள்ளார். இவருக்கும் மேகனா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ககன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து அவருடைய தந்தை போலீசில் மேகனாவுக்கு வேறொரு நபரோடு கள்ள தொடர்பு இருந்தது இதை என் மகன் தட்டிக் கேட்டார். இதனால் மேகனாவில் குடும்பத்தினர் என் மகனை தாக்கி, என் மகனுக்கு தினமும் மேகனா தொல்லை கொடுத்தார். இது என் மகன் தற்கொலைக்கு மேகனா தான் காரணம் என்று புகார் அளித்தார் .
ஆனால் இதை மறுத்துள்ள மேகனா ககனுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருப்பது திருமணம் முடிந்த பிறகு சில நாட்களில் தான் தெரியவந்தது. அந்த பெண்ணோடு நான் பழக்கத்தை கைவிடும்படி பலமுறை கூறினேன் . ஆனால் அவர் கேட்கவில்லை.. அந்த பெண்ணோடு ஏற்பட்ட தகராறு தான் அவரை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
