காலையிலேயே இபிஸ்-க்கு பயங்கர ஷாக்… விஜய் எடுத்த திடீர் முடிவு… கை விரித்த அதிமுக தலைவர்கள்…!

By Nanthini on கார்த்திகை 12, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த தேர்தலில் விஜயும் களமிறங்கியுள்ளதால் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் விஜய்யையும் தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் இபிஎஸ் ஈடுபட்டு வருகின்றார். ஆனால் கூட்டணி தொடர்பாக எந்த பதிலும் அளிக்காமல் விஜய் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றார்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம்  கட்சியுடன் கூட்டணி அமையாவிட்டால் பல அதிமுக தலைவர்கள் போட்டியிட தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயின் வசீகரா மற்றும் பெரிய கூட்டணி இல்லாமல் போட்டியிட ரெடியாக இல்லை என்று மாவட்ட மற்றும் உள்ளூர் தலைவர்கள் இபிஎஸ்ஸுக்கு தகவல் அனுப்ப தொடங்கியுள்ளார்களாம். தேர்தல் பிரச்சாரங்களுக்கு தொகையை செலவிடுவதிலும் சுணக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. விஜயின் இருப்பு பல தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது.