தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த தேர்தலில் விஜயும் களமிறங்கியுள்ளதால் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் விஜய்யையும் தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் இபிஎஸ் ஈடுபட்டு வருகின்றார். ஆனால் கூட்டணி தொடர்பாக எந்த பதிலும் அளிக்காமல் விஜய் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றார்.
இந்நிலையில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையில் மிகக் கடுமையான சண்டை நடந்து வருவதாக தமிழக வெற்றி கழகம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டம் மேடையில் விஜய் அஞ்சலி செலுத்த ஆதவ் எதிர்ப்பு தெரிவித்தாராம். அதேபோல மத்திய பாஜக அரசை எதிர்ப்பதில் கட்சியை நிலைப்பாட்டை மதிக்காமல் செயல்படுவது, திமுக மீது தனிமனித வெறுப்பு கொண்டு பேசுவது விஜய்க்கு பிடிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
