“உங்களின் சித்ரவதைகளுக்கு மரணமே மேல்” ரூ.2 கோடி கடனால் தந்தை செய்த காரியம்… 3 சகோதரிகளின் தற்கொலைக்கு பின்னால் இருக்கும் பகீர் பின்னணி…!!

Spread the love

காசியாபாத்தின் பாரத் சிட்டி குடியிருப்பில் வசித்து வந்த நிஷிகா (16), பிராச்சி (14) மற்றும் பாகி (12) ஆகிய மூன்று சகோதரிகள், கடந்த புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் தங்களது 9-வது மாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் கொரிய கலாச்சாரம் மற்றும் கே-பாப் (K-Pop) இசையில் அதீத ஆர்வம் கொண்டிருந்ததுடன், சமூக வலைதளங்களில் மரியா, அலிசா, சிண்டி போன்ற கொரியப் பெயர்களில் கணக்குகளைத் தொடங்கி பெருமளவிலான பின்தொடர்பாளர்களைப் (Followers) பெற்றிருந்தனர். இவர்களது இந்த வினோத மோகம் மற்றும் செல்போன் பயன்பாட்டைக் கண்டித்த தந்தை சேத்தன் குமார், 10 நாட்களுக்கு முன்பு அவர்களின் கணக்குகளை முடக்கி, செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளார்.

மேலும், பங்குச் சந்தையில் சுமார் ₹2 கோடி கடன் சுமையில் இருந்த தந்தை, மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்காகத் தனது மகள்களின் செல்போன்களை விற்றுள்ளார். வறுமை காரணமாகச் சிறுமிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிக்கும் அனுப்பப்படவில்லை. தற்கொலைக்கு முன்பு சிறுமிகள் எழுதிய 8 பக்கக் கடிதத்தில், “கொரியா தான் எங்கள் வாழ்க்கை; எங்களை ஒரு இந்தியருக்குத் திருமணம் செய்துவைக்க நீங்கள் மிரட்டியது மனவேதனையைத் தந்தது” எனக் குறிப்பிட்டுள்ளனர். “உங்களின் அடிகளுக்கும் சித்ரவதைகளுக்கும் மரணமே மேல்” என்று அவர்கள் உருக்கமாக எழுதியுள்ள கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு, தந்தை மீதான குற்றச்சாட்டுகள் குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Soundarya

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

1 மணத்தியாலம் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

2 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

2 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

2 மணத்தியாலங்கள் ago