Connect with us

மின்னல் முரளி படத்துல என்ன Choose பண்ணதுக்கு காரணம் இதுதானாம்.. உண்மைய சொன்னா நடிகர் சோமசுந்தரம்..!!

CINEMA

மின்னல் முரளி படத்துல என்ன Choose பண்ணதுக்கு காரணம் இதுதானாம்.. உண்மைய சொன்னா நடிகர் சோமசுந்தரம்..!!

பிரபல நடிகர் ஆன குரு சோமசுந்தரம் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பாண்டியநாடு, ஜிகர்தண்டா, ஜோக்கர், வஞ்சகர் உலகம் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவின் ஹீத் லெட்ஜர் என குரு சுந்தரம் அழைக்கப்படுகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் சோமசுந்தரம் நடித்துள்ளார்.

   

மின்னல் முரளி படத்தில் குரு சோமசுந்தரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் குரு சொமசுந்தரம் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மின்னல் முரளி படத்தில் நடிக்க எப்படி உங்களை தேர்ந்தெடுத்தார்கள் என்பது பற்றி கேட்டீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த குரு சோமசுந்தரம் உங்க ஊர்ல நிறைய ஆக்டர்ஸ் இருக்காங்க.

   

 

நிறைய கேரக்டர் ஆர்டிஸ்ட் அதிகமான எண்ணிக்கையில் இருக்காங்க. இதுல என்ன எதுக்கு இந்த படத்துக்கு சூஸ் பண்ணீங்க அப்படின்னு கேட்டேன். முதலில் அவர் பதில் சொல்லவே இல்ல. ஒரு நாள் அவங்க கிட்ட எனக்கு பதில் சொல்லி தான் ஆகணும் அப்படின்னு சொன்னேன். அப்போ அவங்க சொன்னது ஒரு தமிழ் நடிகர் தான் இந்த படத்துல நடிக்கணும்னு முதல்ல யோசிச்சோம். வேற ஒரு நடிகரை யோசித்து வைத்திருந்தோம். அப்போ நீங்க நடிச்ச ஜோக்கர் வஞ்சகர் உலகம் படத்தை ஒருத்தர் போட்டு காமிச்சாரு.

புதிய தமிழ் வரலாற்றுப் படத்தில் ...

எங்களுக்கு ஒரு ஆக்டர் தேவை. அவரு ரொம்ப ஃபேமஸா இருக்கக் கூடாது. ஏன்னா கதை ஓபன் ஆகும் போதே வில்லன் கிட்ட இருந்து தான் படம் ஸ்டார்ட் ஆகும். ஆடியன்ஸ் படத்தை பார்க்கும்போது தெரிஞ்ச வில்லன் நடிகரா இருந்தா ஆடியன்ஸ் மனசுல சேலஞ்ச் வந்துரும். இவர் எப்படி பண்றாருன்னு பாக்கலாம் அப்படிங்கற கண்ணோட்டம் வந்துரும். அவங்களுக்கு நான் நடிச்சா அந்த சீன் நல்லா இருக்கும் நெனச்சிருக்காங்க. அதனால என்ன Choose பண்ணி இருக்காங்க. நான் ரொம்ப லக்கி என பேசி உள்ளார்.

ஆசியாவின் சிறந்த நடிகராக குரு சோம சுந்தரம் தேர்வு! – News18 தமிழ்

author avatar
Priya Ram

More in CINEMA

To Top