CINEMA
“விஜய் கருப்பா இருக்காரு, நாலாம் நடிக்க மாட்டேன்”.. மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட நடிகை.. இப்போ புலம்பி என்ன பண்றது..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் இன்று வெளியாகி உள்ள கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் உடன் நடிக்க நடிகைகள் பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகையான பாலாம்பிகா அண்மையில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், உண்மையில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் நான் நடித்திருக்கலாம். ஆனால் எனக்கு தான் அந்த வாய்ப்பு கொடுத்து வைக்கவில்லை. பிராப்தம் என்ற ஒன்று உள்ளது . அது எனக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன். அந்த படத்தில் நடித்திருக்கலாம் என்று நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் மட்டும் விஜயுடன் நான் நடித்திருந்தால் இன்று என்னுடைய பெயர் உலகம் முழுவதும் பரவி இருக்கும்.
உண்மையிலேயே அந்த திரைப்படம் எனக்கு உறுதியாகிவிட்டது. ஹாஃப் சாரீயில் விஜயின் அப்பா என்னை அலுவலகத்திற்கு நேரில் வரச் சொன்னார். அவரின் படம் எனக்கு கிடைத்து விட்டது என அறிந்தவுடன் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். உடனே நான் அவரை சென்று பார்த்தேன். அப்போது அங்கு விஜயை வரவழைத்து முதல் முறையாக, இவர்தான் என்னுடைய மகன் படத்தில் ஹீரோ என்று கூறினார். அப்போது நான் மிகவும் வெள்ளையாக அழகாக க்யூட்டான லுக்கில் இருப்பேன். அப்படி இருந்த எனக்கு விஜய்யை பார்த்ததும் நமக்கு இவன் ஜோடியா என்று நினைத்து பார்த்தேன்.
இருந்தாலும் எஸ்ஏசி சார் படத்தில் நடிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். அப்போது விஜய் அவ்வளவு அழகெல்லாம் ஒன்றும் கிடையாது. கருப்பாக ஒரு மாதிரி மாநிறம் ஆகத்தான் இருந்தார். இவர் உடனெல்லாம் நடிக்க வேண்டுமா என்று நான் எனக்குள் நினைத்துக் கொண்டு தலையெழுத்து என நினைத்தேன். ஆனால் இப்போதுதான் நான் வருத்தப்படுகிறேன். நான் அவருடன் நடித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு சில காரணங்களால் என்னால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக பாலாம்பிகா வருத்தத்துடன் பேசி உள்ளார்.