CINEMA
AI-ல் விஜயகாந்த்.. குத்தாட்டம் போடும் திரிஷா.. GOAT படத்தில் சர்ப்பிரைஸ் கொடுத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா..?
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். விஜய் தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
கோட் திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். இது மட்டும் இல்லாமல் த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் கேமியோ ரோலில் கோட்திரைப்படத்தில் நடித்துள்ளனர். அதில் ஒரு பாடலுக்கு திரிசா விஜய் உடன் இணைந்து குத்தாட்டம் போடுகிறார்.
மற்றொரு சீனில் சிவகார்த்திகேயன் கையில் விஜய் துப்பாக்கியை கொடுக்கிறார். AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் வரும் காட்சிகளும் மிரட்டலாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் கோட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்து மிரட்டலாக அமைந்துள்ளது. முதல் நாள் முன்பதிவிலேயே வசூல் சாதனை படைத்த கோட் திரைப்படம் இனிவரும் நாட்களில் 1000 கோடி வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.