CINEMA
60 பேர் முன்னாடி.. படத்துல அந்த சீன் தேவைப்பட்டுச்சு.. நடிகை சாந்தினி ஓபன் டாக்..!!
நடிகை சாந்தினி தமிழரசன் சித்து +2 திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சித்து +2 திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் ராஜாவாகப் போகிறேன் திரைப்படத்தில் நடித்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டான்சர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த இப்போது சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா சீரியலிலும் நடித்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு ரிலீசான வஞ்சகர் உலகம் திரைப்படத்தில் சாந்தினி நடித்திருந்தார். அறிமுக இயக்குனரான மனோஜ் அந்த படத்தை இயக்கினார்.
சமீபத்தில் சாந்தினி அளித்த பேட்டியில் கூறியதாவது, வஞ்சகர் படத்தில் போல்டாக நடித்திருந்தேன். கதை சொல்லும் போதே அந்த சீன் ரொம்ப இம்போர்ட்டண்ட்னு சொல்லி இருந்தாங்க. 2,3 சீன் இன்டெர்வல் டைம்ல தேவையா இருந்துச்சு. கதை கேட்கும் போது ஓகேன்னு சொல்லிட்டு செட்டில் போயிட்டு பண்ண மாட்டேன்னு சொல்ற மாதிரி பொண்ணு நான் கிடையாது.
கதை கேட்கும் போதே எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம். அந்த காட்சியில ஆங்கிள் எந்த வரைக்கும் போகும் அப்படின்னு பார்ப்பாங்க. அந்த காட்சியில் கொஞ்சம் அரை நிர்வாண தான் இருக்கும். எந்த அளவுக்கு அதை கேப்ச்சர் பண்ணுவீங்கன்னு பேசி முடிவு பண்ணிட்டோம். அந்த சீன் கரெக்டா எடுத்துட்டாங்க. அந்த சீன் எடுக்கும் போது 60 பேர் அங்க இருந்தாங்க. படம் பார்க்கும்போது எனக்கும் தப்பா தோணல. அதுல ஒர்க் பண்ணதும் எனக்கு தப்பா தோணல என சாந்தினி கூறியுள்ளார்.