CINEMA
இயக்குனர் சேரனால் நான் பட்ட கஷ்டம்.. இப்ப கூட மறக்க முடியல.. மனம் திறந்து பேசிய சிம்புதேவன்..!!
பிரபல இயக்குனரான சிம்பு தேவன் கடந்த 2006-ஆம் ஆண்டு வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் சிம்பு தேவனும் பிரபலமானார். இதனை அடுத்து 2008-ஆம் ஆண்டு அறை எண் 35-ல் கடவுள் படத்தை இயக்கினார்.
இதனை தொடர்ந்து இரும்பு கோட்டை, முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி, கசடதபற உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனரான சேரனிடம் அசிஸ்டன்டாக வேலை பார்த்துள்ளார். சித்ரா லட்சுமணன் உடனான ஒரு பேட்டியில் சிம்பு தேவன் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் சேரன் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சிம்பு தேவன் கூறியதாவது, சேரன் சார் கிட்ட அசிஸ்டன்ட்டா வேலை பார்க்கும் போது மிலிட்டரியில் வேலை பார்க்கிற மாதிரி இருக்கும். அங்க கடுமையான வேலை இருக்கும். அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்துட்டு இப்ப படம் பண்ணும் போது எனக்கு ரொம்ப ஈஸியா இருக்கு. ஆனா அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்த வரைக்கும் நான் ரொம்ப கஷ்டத்துல இருந்தேன்.
அவ்வளவு தூரம் மன அழுத்தம் இருக்கும். கண்டிப்பு அப்படிங்கறத தாண்டி பர்ஃபெக்சன், நம்ம அந்த நேரத்துக்குள் வேலையை முடிச்சு கொடுக்கணும், ஹார்டுஒர்க் அப்டினு நிறைய இருக்கு. அங்கு முடிச்சுட்டு நான் வெளிய வந்து ஃபர்ஸ்ட் படம் பண்ணும் போது பதட்டமே இல்லாம இருக்கோமெனு தோணும். அந்த அளவுக்கு அவரோட ட்ரெய்னிங் இருக்கும் என பேசி உள்ளார்.