கடைசி நேரத்தில் ஜனநாயகனுக்கு காலை வாரிய நிறுவனம் – சட்டென்று விஜய்க்கு கை கொடுத்து உதவியது யார் தெரியுமா?

By Elango on மார்கழி 26, 2025

Spread the love

ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் செய்ய சிதாரா எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் வினியோக அடிப்படையில் ரூ. 9 கோடிக்கு ஜனநாயகன் படத்தை வாங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் ஜனநாயகன் படத்தை நாங்கள் வெளியிட முடியாது என்று திடீரென பின்வாங்கி விட்டது.

அதற்கு காரணம் நடிகர்கள் சிரஞ்சீவி பிரபாஸ் மற்றும் வெங்கடேஷ் போன்ற பெரிய நட்சத்திர நடிகர்களின் 3 படங்களும் அதுபோக ஒரு 3 படங்களும் என மொத்தம் 6 படங்கள் வருகிற சங்கராந்திக்கு தெலுங்கில் வெளியாகின்றன. அந்த படங்களுக்கான தியேட்டர்களே அதிகம் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால் அந்த நிறுவனம் ஜகா வாங்கியது. இந்த இக்கட்டான நிலையில், பிவிஆர் நிறுவனம் ஜனநாயகன் படத்தை ஆந்திரா தெலுங்கானாவில் வெளியிட முன்வந்து விஜய்க்கு உதவியுள்ளது.