“இனிமேலும் எனக்கு கல்யாணம் ஆகாது, நான் சாகுறதே மேல்”… பிறந்த நாளிலேயே உயிரை மாய்த்துக்கொண்ட பட்டதாரி பெண்… கழிவறையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

செங்கல்பட்டில் திருமணமாகாத விரக்தியில் இளம் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கும் மகனுக்கும் திருமணமான நிலையில் இளையமகள் தீபிகா (28). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு கடந்த ஏழு வருடங்களாக திருமண வரன் பார்த்து வந்த நிலையில் திருமணமாகாத விரக்தியில் தீபிகா இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

பிறந்த நாளான இன்று கோவிலுக்கு செல்லலாம் என்று பூஜை சாமான்கள் வாங்கி வைத்துவிட்டு பெற்றோர் தயாராக இருந்த நிலையில் குளித்துவிட்டு வருவதாக கூறி கழிவறைக்கு சென்ற தீபிகா நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்காததால் உடைத்துக் கொண்டு உள்ளே பார்த்தபோது உள்ளே உள்ள ஷவரில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தீபிகா தற்கொலை தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தன. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.