சீமானும் விஜயும் பாஜகவின் பிள்ளைகள் என்றால் திருமாவளவன் யாருடைய பிள்ளை? திமுகவின் பிள்ளையா அல்லது காங்கிரஸின் பிள்ளையா என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பூ, டிசம்பர் 26ஆம் தேதி யாராலும் மறக்க முடியாத நாள். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரம் சுனாமி வந்ததில் அத்தனை மக்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு பாஜக சார்பாக அஞ்சலி செலுத்தினோம்.
மீனவர்களின் நலனுக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும். விசிக தலைவர் திருமாவளவன் Mind set இதுதான், இதுவே கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்து விடுமா என கூற முடியுமா? இந்துமெஜாரிட்டி அதிகம் உள்ளதால் தொடர்ந்து மண்டையில் கொட்டிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களுடைய கூட்டணியில் இருப்பவர்கள் கோவிலுக்கு செல்வார்கள், பட்டை பூசுவார்கள், தீபம் ஏற்றுவார்கள், வீட்டில் பூஜை நடத்துவார்கள். இவை அனைத்துமே நான்கு சுவற்றுக்குள் மட்டுமே நடக்கும், மக்களுக்கு தெரியாது என்று நினைப்பார்கள்.
இந்த தேர்தலுக்கு எந்த கோவிலுக்கும் போக வேண்டாம். எந்த சர்ச், மசூதி பள்ளிவாசலிலும் திருமாவளவன் நிற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன். தேர்தலில் போட்டியிடும் ஆசையோடு நான் கட்சிக்கு வரவில்லை. தலைவரும் கட்சியும் என்ன சொல்கின்றதோ அதற்கு நான் கட்டுப்பட்டு செயல்படுவேன். தேர்தலில் வாய்ப்பு கொடுப்பவர்கள் மற்றும் பொறுப்பு கொடுப்பவர்கள் என எந்த எதிர்பார்ப்போடும் நான் பாஜகவிற்கு வரவில்லை. கட்சி வளர்ச்சிக்கு தான் வந்தேன். விஜயும் சீமானும் பாஜகவின் பிள்ளைகள் என்றால் திருமாவளவன் யாருடைய பிள்ளை? திமுகவின் பிள்ளையா அல்லது காங்கிரசின் பிள்ளையா. பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக வந்த கணக்குகள் வதந்தி மட்டுமே என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.
