CINEMA
GOAT படத்துக்கு ஆப்பு வைத்த ரோகினி தியேட்டர்.. அதிர்ச்சியில் உறைந்த தளபதி ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, லைலா, பிரபு, பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வருகிற செப்டம்பர் மாதம் 5- ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த 17-ஆம் தேதி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. துப்பாக்கி சண்டை, கார் சேஸிங், மோட்டார் சைக்கிளில் பறப்பது என ஆக்சன் காட்சிகள் நிறைந்து காணப்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அது மட்டும் இல்லாமல் பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் கோட் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார்களாம்.
இந்த நிலையில் ரோகினி தியேட்டரில் கோட் படத்திற்கான முன் பதிவு தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவு டிக்கெட் புக் ஆகவில்லை. அதற்கு காரணம் என்னவென்று விசாரித்த போது டிக்கெட் விலையும் ஸ்னாக்ஸ் கட்டணமும் சேர்த்து 586 ரூபாய் விலை போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் காரணத்தினால் அதிக அளவு டிக்கெட் புக் ஆகவில்லை.
முன்னதாக சென்னை கமிஷனர் கோட் படம் திரையிடப்படும் தியேட்டர் உரிமையாளர்களை சந்தித்து கோட் படத்தின் டிக்கெட் விலை அதிகமாக இருக்கக் கூடாது. அரசு நிர்ணயத்தை விட அதிக காட்சிகள் திரையிடக்கூடாது. இரவு 1.30 மணிக்கு காட்சிகளை முடித்து ரசிகர்களை வெளியே அனுப்ப வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை கூறியுள்ளார். இது மட்டும் இல்லாமல் காசி தியேட்டருக்கு சென்று ஏற்கனவே இருந்த பேனர்களை நீக்கி, பேனர் வைக்க முடியாத அளவுக்கு போலீசார் அனைத்தையும் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.