CINEMA
வயசாகியும் திருமணம் செய்து கொள்ளாத 6 தமிழ் நடிகர்கள்… 56 வயதிலும் இளம் நடிகர்களுக்கு Tough கொடுக்கும் SJ சூர்யா…
சினிமாவில் பல நடிகைகள் வாய்ப்புகள் போய்விடக்கூடாது மார்க்கெட் போய் விடக்கூடாது என்பதற்காக திருமணம் செய்யாமல் தள்ளிப் போடுவார்கள். ஆனால் இந்த வரிசையில் நடிகர்களும் உண்டு. அப்படி தமிழ் சினிமாவில் வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத ஆறு நடிகர்களை பற்றி இனி காண்போம்.
1. எஸ் ஜே சூர்யா
எஸ். ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். சமீபத்திய காலங்களில் அனைத்து திரைப்படங்களிளும் நடித்து பிரபலமாகி வரும் எஸ் ஜே சூர்யா அவர்களுக்கு 56 வயதாகிறது. இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாகவே இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.
2. அதர்வா
மூத்த நடிகர் மற்றும் முன்னணி நடிகரான முரளி அவர்களின் மகன்தான் அதர்வா. இவர் 2010 ஆம் ஆண்டு பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இது தவிர முப்பொழுதும் உன் கற்பனைகள், இமைக்கா நொடிகள், பரதேசி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 35 வயதாகியும் அதர்வா திருமணம் செய்து கொள்ளவில்லை.
3. ஜெய்
ஜெய் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராவார். இவர் இசையமைப்பாளர் தேவா அவர்களின் தம்பி மகன் ஆவார். சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஜெய் சுப்ரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, திருமணம் என்னும் நிக்கா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 40 வயதாகியும் ஜெய் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார்.
4. விஷால்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஷால் நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். பெரும்பாலும் ஆக்சன் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் விஷால். இவரது தந்தை தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆவார். சண்டக்கோழி, தாமிரபரணி, பாண்டியநாடு போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் விஷால். தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகம் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் 48 வயதாகும் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
5. சிம்பு
சிலம்பரசன் எனப்படும் சிம்பு மூத்த நடிகர் மற்றும் இயக்குனரான டி ராஜேந்தர் அவர்களின் மகன் ஆவார். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ஒருவர் ஆவார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் சிம்பு. தற்போது 41 வயதாகியும் சிம்பு சிங்களாகவே இருந்து வருகிறார்.
6. வினய்
உன்னாலே உன்னாலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். இவர் ஜெயம் கொண்டான், என்றென்றும் புன்னகை, அரண்மனை, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர். தற்போது 44 வயதாகும் வினய் ராய் திருமணம் செய்து கொள்ளவில்லை.