CINEMA
ஒரு வழியாக சிக்கலிலிருந்து வெளிவந்த தனுஷ்.. ஹியூஜ் அமவுண்ட்டுக்கு விலைபோன ராயன்..!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ரெட் அலர்ட் போடப்பட்ட விவகாரம் நடிகர் சங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தனுஷ் விவகாரம் மிகப்பெரிய அளவில் சூடு பிடித்தது. அதாவது 5 ஸ்டார் கதிரேசன் என்பவரிடம் மூன்று கோடி ரூபாய் கடனாக பெற்ற தனுஷ் அதிலிருந்து அவருக்கு படம் எதுவும் நடித்துக் கொடுக்கவில்லை.
இதனால் பல வருடம் காத்திருந்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பாளர் சங்கத்திடம் தனுஷ் மீது புகார் ஒன்றை அளித்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தனுஷ் அவருக்கு நான் படம் பண்ண முடியாது என்று கூறினார். தனுசுக்கு பைவ் ஸ்டார் கதிரேசன் மூன்று கோடி ரூபாய் கொடுத்து பல வருடங்கள் ஆன நிலையில் வட்டியுடன் சேர்த்து அது மொத்தம் 16 கோடியாக மாறியது.
ஒரு வழியாக பேச்சுவார்த்தை நடத்தி 10 கோடி ரூபாய் தருவதாக தனுஷ் பேசி முடித்துள்ளார். தனுஷ் நஸ்ரியா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான நையாண்டி திரைப்படத்தை தயாரித்த கதிரேசன் அந்த சமயத்தில் தனுசுக்கு அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் என்று அந்த மூன்று கோடியை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் 11 வருடம் ஆன நிலையில் தற்போது அந்த பணத்தை வட்டியோடு சேர்த்து தனுஷ் செட்டில் செய்து இந்த பிரச்சினையை முடித்துள்ளார்.