CINEMA
சிவாஜி கணேசனுடன் வார்த்தையில் விளையாடிய நாகேஷ்… அவர் அப்படிதானாம்…
நாகேஷ் தாராபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலேயே சென்னைக்கு குடி பெயர்ந்தார். எழுத்தாளர் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் ஒரே அறையில் தங்கிருந்தவர் நாகேஷ். தென்னக ரயில்வேயில் பணிபுரிந்தவர் நாகேஷ். பின்னர் சினிமாவில் அறிமுகமாகி நகைச்சுவை நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் நாகேஷ். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இணையாக போற்றப்பட்டவர் நாகேஷ்.
கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்த நாகேஷ் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். முக்கிய வேடங்கள், துணை வேடங்கள், நகைச்சுவை வேடங்கள், குணச்சித்திர வேடங்கள் என அனைத்து வேடங்களிலும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நாகேஷ்.
சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நாகேஷ் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1959 ஆம் ஆண்டு தாமரை குளம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் பிரபலமானார் நாகேஷ். இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா என்பது குறிப்பிடத்தக்கது.
திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டுத்தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் நாகேஷ். அதேபோல் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வைத்தி என்ற பாத்திரத்தில் இவர் நடித்ததால் பாராட்டையும் பெற்றார்.
நாகேஷ் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் நான் வணங்கும் தெய்வம் ஆகும். அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் முறையாக நாகேஷை சந்திக்கிறார். அப்போது நாகேஷிடம் நாங்க ஏதோ பெரிய நடிகர்கள் நினைச்சுகிட்டு எங்க கூட நடிக்க பயந்துகிட்டு கோட்டை விட்டுறாதீங்க அப்படின்னு சொல்லி இருக்கிறார்.
உடனே பதிலுக்கு நாகேஷ் புதுசு தானே அப்படின்னு நினைச்சுட்டு நீங்களும் கோட்டை விட்டுறாதீங்க அப்படின்னு சிவாஜி கணேசன் அவர்களிடம் எதிர்த்து வார்த்தையால் விளையாடியிருக்கிறார் நாகேஷ். உடனே அந்த இடமே கலகலப்பாக மாறி இருக்கிறது.