Connect with us

நான் அந்த நேரத்தில் திருமணம் செய்திருக்க கூடாது… வருத்தப்பட்ட ரேவதி…

CINEMA

நான் அந்த நேரத்தில் திருமணம் செய்திருக்க கூடாது… வருத்தப்பட்ட ரேவதி…

1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரேவதி.கேரளாவில் கொச்சியில் பிறந்து வளர்ந்தவர் ரேவதி. இவரின் இயற்பெயர் ஆஷா கெலுன்னி என்பதாகும். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்திய சினிமாவின் மிகவும் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ரேவதி.

   

பள்ளியில் படிக்கும் போதே பேஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர் ரேவதி. அப்படி ஒரு பேஷன் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட போட்டோக்களை ஒரு பிரபல இதழுக்கு அனுப்பி வைத்தார். அந்த இதழ் ரேவதி போட்டோவை அட்டை படமாக தேர்வு செய்து வைத்தது. இந்த புகைப்படம் பாரதிராஜா அவர்களின் கண்ணில்பட்டது. உடனே பாரதிராஜா ரேவதியை அணுகி தனது திரைப்படமான மண்வாசனை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார்.

   

மண்வாசனை திரைப்படம் வெள்ளிவிழா கண்டு மாபெரும் வெற்றி பெற்றதோடு முதல் படத்தின் மூலமாகவே பட்டி தொட்டியும் எங்கும் பரவி பிரபலமானார் ரேவதி. தொடர்ந்து புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தாள், மௌன ராகம் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார் ரேவதி.

 

நடிகை ரேவதி நடிகர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என திரையுலகில் பன்முகத் தன்மை கொண்ட சுரேஷ் சந்திரா மேனன் என்பவரை 1986 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரேவதி. திருமணம் நடந்தபோது அவர் தமிழில் உச்சபட்ச நடிகையாக புகழின் உச்சத்தில் இருந்தார். இது சம்பந்தமாக அவர் ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்.

ரேவதி கூறியது என்னவென்றால், நான் வெகு விரைவில் திருமணம் செய்து கொண்டேன். திருமணம் செய்து கொண்ட பின்பு ஒரு இரண்டு வருடங்கள் எந்த படத்திலும் நான் நடிக்காமல் இருந்து விட்டேன். அந்த நேரத்தில் நான் திருமணம் செய்து கொண்டது மிகவும் தவறு. அப்படியே திருமணம் செய்து இருந்தாலும் உடனே நடிப்பதற்கு வந்திருக்க வேண்டும். அந்த இரண்டு வருடங்களில் பல பெரிய படங்களில் நல்ல நல்ல வாய்ப்புகளை நான் தவற விட்டு விட்டேன் என்று கூறியிருக்கிறார் ரேவதி.

More in CINEMA

To Top