CINEMA
நடிப்பிற்கு முழுக்கு போட்டு மீண்டும் டைரக்ஷனில் இறங்கிய செல்வராகவன்.. அந்த கதையை தீவிரமா ரெடி பண்றாராம்..!!
பிரபல இயக்குனரான செல்வராகவன் கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு கடந்த 2004-ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி படத்தை இயக்கினார்.
பின்னர் 2006-ஆம் ஆண்டு புதுப்பேட்டை படத்தை இயக்கி திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களையும் செல்வராகவும் இயக்கியுள்ளார். தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் செல்வராகவனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது.
ராயன் படத்திற்கு பிறகு அவருக்கு அடுத்த மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்துவிட்டாராம் செல்வராகவன். அதற்கு காரணம் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களை இயக்க செல்வராகவன் ஆர்வத்தோடு கதையை தயார் செய்கிறாராம். ஏற்கனவே செல்வ ராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு ரிலீசான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை இப்போது எடுத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது 50 சதவீத படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாம். மீதமுள்ள 50 சதவீதம் தான் எடுக்க வேண்டி இருக்கிறது. இதனால் நடிப்பதை தவிர்த்து விட்டு இயக்குனராக திரையுலகில் தனக்கு கிடைத்த அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள செல்வராகவன் முயற்சி செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது.