BREAKING: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 எகிறியது… நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…!!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாகச் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்து நகை வாங்கத் திட்டமிட்டிருந்த மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,880-க்கும், கிராமுக்கு உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து ஆபரண வெள்ளியின் விலையிலும் இன்று உயர்வு. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.240-ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-ஆகவும் சந்தையில் விற்பனையாகி வருகிறது. இந்தத் திடீர் விலை உயர்வானது நகை பிரியர்கள் மற்றும் சாமானிய மக்களிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.