அதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் கொடுத்த ‘பவர்’ செக்…. 2026-ல் மெகா ட்விஸ்ட்?… பரபரப்பை கிளப்பிய பிரபலம்…!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர் மற்றும் மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்கள், வெறும் இடப் பங்கீடு மட்டும் போதாது, வரும் தேர்தலில் “ஆட்சியில் பங்கு”  வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் விமர்சனம் செய்ததும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்  காங்கிரஸ் இணைய வாய்ப்புள்ளதாக எழுந்த வதந்திகளும் திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்றும், நீண்டகாலமாக ஒற்றைக் கட்சி ஆட்சியே நடைபெற்று வருவதால் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் திமுக தரப்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ராகுல் காந்தி மற்றும்  ஸ்டாலின் இடையே நல்லுறவு இருந்தபோதிலும், கீழ்மட்டத் தலைவர்களின் இத்தகைய பேச்சுகள் கூட்டணியின் ஒற்றுமையைக் குலைப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை போன்றோர் “காங்கிரஸ் திமுகவுடன்தான் இருக்கிறது” என்று கூறி நிலைமையைச் சரிசெய்ய முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறதா என்ற கேள்விக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்று பதிலளித்துள்ளார். திமுக கூட்டணி குறித்து காங்கிரஸ்  தலைவர்களிடம் தலைமை கருத்து கேட்டுள்ளதாக கூறிய அவர், அனைவரும் அவரவர் விருப்பங்களை கூறி உள்ளதால் அதனடிப்படையில் தலைமை முடிவெடுக்கும் என்றார். இவருடைய இந்த பதில் திமுகவிற்கு சற்று அதிர்ச்சியளித்திருப்பதாக பேசப்படுகிறது.
Nanthini

Recent Posts

“45 பந்து.. 101 ரன்கள்” குஜராத்தை கதறவிட்ட திலக் வர்மா… தம்பியின் சதத்தை அண்ணனாகக் கொண்டாடிய பாண்டியா..!!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…

3 minutes ago

சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்.. தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தொழிலாளர் துறை எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…

7 minutes ago

EPFO 3.0 அப்டேட்…! 75% வரை பிஎஃப் பணத்தை உடனடியாக எடுக்கலாம்…. புதிய ரூல்ஸ் என்ன சொல்லுது…?

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…

11 minutes ago

புது ஷூ கேட்ட தம்பி… கோபத்தில் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த அண்ணன்… ஒரு நொடி ஆத்திரத்தால் நேர்ந்த விபரீதம்…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…

19 minutes ago

இன்சூரன்ஸ் கம்பெனி பணம் தரமாட்டேங்குதா…? க்ளைம் ரிஜெக்ட் ஆகாம இருக்க இந்த 5 விஷயத்தை பாருங்க…!!

கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…

25 minutes ago

“நெருங்கும் 60 நாள் கெடு” ட்ரம்ப் பணியப் போகிறாரா..? அல்லது விதியை மீறப்போகிறாரா..? உலகையே அதிரவைக்கும் அமெரிக்கப் போர்ச் சட்டம்…!!

அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள 'யுத்த அதிகாரங்கள் தீர்மானம்' (War Powers Resolution) படி, அதிபர் ஒருவர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி…

32 minutes ago