காதல் திருமணமான ஒரே மாதத்தில் மனைவி போட்ட கண்டிஷன்… 22 வயது இளைஞர் தற்கொலை… உருக்கமான பின்னணி…!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசி சவேரியார்பாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (22) என்ற இளைஞர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து கடந்த மாதம் தான் மணம் முடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு வந்தவாசியில் வாடகை வீட்டில் தங்கி இவர்கள் குடும்பம் நடத்தி வந்த நிலையில், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தன்று மோகன்ராஜ் தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதாக மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அவரது மனைவி அதற்கு அனுமதி மறுத்துக் கண்டித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோகன்ராஜ், வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார், மோகன்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

அடச்சீ அசிங்கமா இல்லையா?…. “தத்து கொடுத்த மகன்.. 14 வருடம் கழித்து ஃபேஸ்புக்கில் தேடிய தாய்”… ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்…!

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புனிதமான உறவைச் சிதைக்கும் வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை…

10 minutes ago

மனைவிக்காக காத்திருந்த கணவன்.. பிணமாகக் கிடந்த தாய்… திண்டுக்கல் அருகே நடந்த பகீர் சம்பவம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் (41) என்ற நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட…

19 minutes ago

“ஒரே வாரத்தில் தலைகீழாக மாறிய தேர்தல் களம்”… யார் அந்த நம்பர் 1?… பிரச்சாரம் முடியும் நாளில் வெளியான ரகசிய டிஜிட்டல் டேட்டா….!

தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நிஜக் களத்திற்கு இணையாக டிஜிட்டல் தளங்களிலும் கணிப்புகள் அனல் பறக்கின்றன.…

29 minutes ago

“ஸ்டாலின் Vs இபிஎஸ் Vs விஜய்”…. 2026-ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் இவரா?… சத்தா பஜார் கொடுத்த மெகா ஷாக் ரிப்போர்ட்….!

சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…

39 minutes ago

“உன் புருஷன் தூரமா இருக்கான்ல.. நான் பார்த்துக்குறேன்”… பெண் ஊழியரின் முந்தானையைப் பிடித்து இழுத்த மேலாளர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்…!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…

50 minutes ago

ஷாக் நியூஸ்… அடுத்த வாரமே மாறப்போகும் தங்கத்தின் தலைவிதி… அமெரிக்காவில் நடக்கும் அந்த ‘ரகசிய’ கூட்டம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…

59 minutes ago