விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், தணிக்கை வாரியத்தின் முரண்பட்ட முடிவுகளால் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியுள்ளது. தனி நீதிபதி வழங்கிய ‘யுஏ 16+’ சான்றிதழுக்கு எதிராகத் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க வேண்டிய சூழல் உருவானது.
இந்நிலையில், ஜனவரி 20-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட நேர வாதங்களுக்குப் பிறகு, நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியம் ஆகிய இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், தனது முடிவை நிறுத்தி வைத்துள்ளதால், படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
தீர்ப்பு வெளியாகும் வரை ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராதது, விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. . அதேநேரம் இன்று அல்லது நாளை இதுதொடர்பாக தீர்ப்பு வெளியாகும் என விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த 2 நாள்களுக்குள் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்த வாரம் (அ) பிப்ரவரி 2-வது வாரத்தில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…
ஈரானின் உச்ச தலைவராக சுமார் 35 ஆண்டுகள் பதவி வகித்த அயதுல்லா அலி காமேனி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்க…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. திமுக,…
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் விலக உள்ளதாக அந்த…
கேது பகவான் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் ஏப்ரல் 20-ம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், டிசம்பர் 5, 2026…