“10 + 1 + 1″… அதிமுகவுக்கு செக் வைத்த பிரேமலதா… அதிர்ந்துபோன இபிஎஸ்… 2026-ல் மெகா ட்விஸ்ட்….!

Spread the love

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பது குறித்து தேமுதிக தலைமை ஆலோசித்து வரும் நிலையில், அக்கட்சி அதிமுகவிடம் சில முக்கிய கோரிக்கைகளை ‘பெரிதாக’ முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, கடந்த 2011-ம் ஆண்டு கூட்டணியில் ஒதுக்கப்பட்டது போன்ற கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை தேமுதிக எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 40 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வேண்டும் என்பதும், அத்துடன் கூடுதலாக ஒரு ராஜ்யசபா (மாநிலங்களவை) உறுப்பினர் பதவியை தங்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என்பதும் தேமுதிகவின் பிரதான டிமாண்டாக வைத்திருந்தது.

தற்போது கடலூர் மாநாட்டை சுட்டிக்காட்டி அதிமுகவிடம் 10 சட்டமன்ற தொகுதி, 1 ராஜ்யசபா சீட், 1 மத்திய இணை அமைச்சர் பதவி வேண்டும் என பெரிய டிமாண்டை தேமுதிக வைத்துள்ளதாம். இதனைக்கேட்டு ஷாக்கான அதிமுக தரப்பு, தொகுதிகள் ஓகே, ஆனால் மத்திய அமைச்சர் பதவிக்கு நாங்கள் எப்படி கேரண்டி கொடுப்பது என பாஜகவிடம் பேசும்படி அறிவுறுத்தியுள்ளதாம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில், விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்த் கட்சியை வழிநடத்தி வரும் சூழலில், இந்தத் தேர்தல் தேமுதிகவுக்கு வாழ்வா சாவா போராட்டமாக அமைந்துள்ளது. கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட சறுக்கல்களைச் சரிசெய்து, மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. அதேசமயம், மற்ற கட்சிகளும் கூட்டணிக்கு வரும் பட்சத்தில், தேமுதிகவின் இந்த மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை அதிமுக தலைமை முழுமையாக ஏற்குமா அல்லது தொகுதிப் பங்கீட்டில் சமரசம் செய்யப்படுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ச்சீ!.. இதுக்கெல்லாமா கிளாஸ் எடுப்பீங்க?”… “62 மில்லியன் ஆண்கள்… ஒரு பாலியல் வன்கொடுமைப் பள்ளி”… இணையத்தையே உலுக்கும் ‘டார்க் வெப்’ ரகசியம்….!

இணையத்தின் இருண்ட உலகமான 'டார்க் வெப்' (Dark Web) தளங்களில், 'பாலியல் வன்கொடுமை பயிற்சிப்பள்ளி' ஒன்று செயல்பட்டு வந்தது உலக…

4 minutes ago

அடச்சீ அசிங்கமா இல்லையா?…. “தத்து கொடுத்த மகன்.. 14 வருடம் கழித்து ஃபேஸ்புக்கில் தேடிய தாய்”… ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்…!

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புனிதமான உறவைச் சிதைக்கும் வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை…

14 minutes ago

மனைவிக்காக காத்திருந்த கணவன்.. பிணமாகக் கிடந்த தாய்… திண்டுக்கல் அருகே நடந்த பகீர் சம்பவம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் (41) என்ற நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட…

24 minutes ago

“ஒரே வாரத்தில் தலைகீழாக மாறிய தேர்தல் களம்”… யார் அந்த நம்பர் 1?… பிரச்சாரம் முடியும் நாளில் வெளியான ரகசிய டிஜிட்டல் டேட்டா….!

தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நிஜக் களத்திற்கு இணையாக டிஜிட்டல் தளங்களிலும் கணிப்புகள் அனல் பறக்கின்றன.…

33 minutes ago

“ஸ்டாலின் Vs இபிஎஸ் Vs விஜய்”…. 2026-ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் இவரா?… சத்தா பஜார் கொடுத்த மெகா ஷாக் ரிப்போர்ட்….!

சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…

43 minutes ago

“உன் புருஷன் தூரமா இருக்கான்ல.. நான் பார்த்துக்குறேன்”… பெண் ஊழியரின் முந்தானையைப் பிடித்து இழுத்த மேலாளர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்…!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…

54 minutes ago