ஜனநாயகன் ரிலீஸ்.. காலையிலேயே விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!

By Nanthini on தை 21, 2026

Spread the love

விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், தணிக்கை வாரியத்தின் முரண்பட்ட முடிவுகளால் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியுள்ளது. தனி நீதிபதி வழங்கிய ‘யுஏ 16+’ சான்றிதழுக்கு எதிராகத் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க வேண்டிய சூழல் உருவானது.

இந்நிலையில், ஜனவரி 20-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட நேர வாதங்களுக்குப் பிறகு, நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியம் ஆகிய இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், தனது முடிவை நிறுத்தி வைத்துள்ளதால், படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

   

தீர்ப்பு வெளியாகும் வரை ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராதது, விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. . அதேநேரம் இன்று அல்லது  நாளை இதுதொடர்பாக தீர்ப்பு வெளியாகும் என விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த 2 நாள்களுக்குள் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்த வாரம் (அ) பிப்ரவரி 2-வது வாரத்தில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.