கணவனும் மனைவியும் தங்களது திருமண உறவை முடிவுக்குக் கொண்டுவர விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்திட நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அப்போது, அவர்கள் தங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்துப் பிரிய முடிவெடுத்த நிலையில், அவர்களின் குழந்தை தந்தையின் மடியை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவரையே கட்டியணைத்துக் கொண்டு பிரிவின் வலியை வெளிப்படுத்தியுள்ளது. அமைதியாக இருக்கும் அந்தப் பிஞ்சு குழந்தையின் செய்கையும் கண்ணீரும் அங்கிருந்தவர்களின் மனதை உலுக்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்த நெகிழ்ச்சியான தருணம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, பயனர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினர் தங்களுக்குள் இருக்கும் மனக்கசப்பால் விவாகரத்து செய்யும்போது, அதில் எந்தத் தவறும் செய்யாத அப்பாவி குழந்தைகள் ஆயுள் முழுவதும் அந்தப் பிரிவின் வேதனையைச் சுமக்க நேரிடுகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் பெற்றோர் தங்களின் சுயநலத்தைப் பார்க்காமல், பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பிரிவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
