“திடீரென திறக்கப்பட்ட கார் கதவு…” பைக் மோதி நிலைகுலைந்து விழுந்த வாலிபர்…. ஒரே நொடியில் முடிந்த வாழ்க்கை…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 1, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள கேம்ப் பகுதியில், சூர்யகாந்த் பிட்கர் என்பவர் வியாழக்கிழமை நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த பெண் ஒருவர், பின்னால் வரும் வாகனத்தைக் கவனிக்காமல் திடீரெனக் காரின் கதவைத் திறந்துள்ளார். எதிர்பாராதவிதமாகத் திறக்கப்பட்ட கதவின் மீது பைக் மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சூர்யகாந்திற்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கார் கதவு சட்டென்று திறக்கப்பட்டதால், பைக்கை திருப்பவோ அல்லது நிறுத்தவோ முடியாமல் இந்த விபத்து நடந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சோகச் சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் லஷ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.