என்னது… புது iPhone Pro இப்பவே லீக் பண்ணிட்டாரா?… கார்த்திக் ஆர்யன் போட்ட போட்டோவால்… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்… இணையத்தில் வைரல்…!!

By Swetha on ஐப்பசி 8, 2026

Spread the love

பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் லண்டன் ஐ பின்னணியில் நின்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்புகைப்படத்தில் அவர் கையில் வைத்துள்ள ஐபோனின் கேமரா அமைப்பைப் பார்த்த ரசிகர்கள், அதில் இரண்டு ஃபிளாஷ் லைட்கள் மற்றும் கூடுதல் சென்சார்கள் இருப்பதை உற்றுநோக்கி சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், ஆப்பிள் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத எதிர்கால “iPhone Pro” மாடல் போனை கார்த்திக் ஆர்யன் தவறுதலாக லீக் செய்துவிட்டாரா அல்லது இது ஏஐ தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட எடிட்டிங் குளறுபடியா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக எழுந்துள்ளன.

   

பெரும்பாலான நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள், புகைப்படத்தை எடிட் செய்யும்போது அல்லது பின்னணியை மாற்ற ஏஐ கருவியைப் பயன்படுத்தியபோது உருவான பிழைதான் இந்த விசித்திரமான கேமரா வடிவமைப்புக்கு காரணம் என்று கருத்து தெரிவித்து கிண்டல் செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த புகைப்பட எடிட்டிங் சர்ச்சை குறித்து கார்த்திக் ஆர்யன் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை.